பாஜக பிரமுகர் கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் திமுக அமைச்சர்கள், திமுகவின் தலைவர்கள், குறிப்பாக ஈ வே ராமசாமி மற்றும் கருணாநிதி போன்றவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவிப்பவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் திமுக அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். சமூக வலைதலைமூலமாக டிவிட்டர் பக்கத்தில் அவதூறு பரப்பிய காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

திமுக எம்பி செந்தில்குமார் மற்றும் ஷர்மிளா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், 10 மணிநேரத்தில் கல்யாணராமனை, சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே, பாஜக பிரமுகர் கல்யாணராமன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சற்று முன்பு விசாரணை செய்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp kalyanaraman bail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->