சுவாமிமலையில் வேல் பூஜை! பாஜக ஹெச்.ராஜா விடுத்த அழைப்பு!
BJP H Raja Vel pooja Swamy malai
விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் சார்பில் சுவாமிமலையில் வேல் பூஜை நடக்க உள்ளதாகவும், அதில் தான் கலந்து கொள்ள உள்ளதாகும் பாஜக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அக்டோபர் 7.10.2025 செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு சுவாமிமலையில் வேல் பூஜை ஆராதனை விழா..!!
ஜூன் 22 மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்ற நாட்கள் தமிழகமெங்கும் 1000 இடங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் சார்பில் வேல் பூஜை, கோ பூஜை, கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அக்டோபர் 6.10.2025 திங்கள் கிழமை மற்றும் 7.10.2025 செவ்வாய் கிழமை ஆகிய இரு தினங்கள் தமிழகத்தில் முத்தமிழ் முருகனின் அறுபடை வீடுகளிலும் வேல் பூஜை ஆராதனை வழிபாடு நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 7.10.2025 செவ்வாய்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெறவுள்ள வேல் பூஜை ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளேன்.
தமிழகம் முழுவதும் முத்தமிழ் முருகனின் அறுபடை வீடுகளிலும் இன்றும், நாளையும் நடைபெறும் வேல் பூஜை ஆராதனை நிகழ்ச்சியில் முருக பக்தர்களும், தேச பக்தர்களும் கலந்துகொண்டு முத்தமிழ் முருகனின் அருள் பெருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP H Raja Vel pooja Swamy malai