சந்தேகமாக இருக்கு! சேகர் பாபு உடனடியாக ராஜினாமா செய்ய‌ வேண்டும் - பாஜக எச்.ராஜா போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


பாஜக தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக ராஜினாமா செய்ய‌ வேண்டும்.

திமுக அரசு இந்து அறநிலையத்துறை புணரமைக்கும் தரம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

இதுபோல புணரமைக்கப்பட்ட‌ கோயில்களை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, இந்திரன் சன்னதியை பராமரித்து, ஆராதனை செய்து வழிபட தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் வழக்கில், மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், "கல்லறைகளை பாதுகாக்கவே மத்திய தொல்லியல் துறை உள்ளதாக தெரிகிறது.

கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது.

தலைமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் மத்திய தொல்லியல் துறை போதிய அக்கறை காட்டுவதில்லை என்று கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP H Raja say sekar Babu should resign


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->