நாதக-வை விட பாஜக அதிக வாக்கு வாங்கினால் கட்சியை கலைத்துவிட்டு செல்வேன் - சீமான் பரபரப்பு பேச்சு!! - Seithipunal
Seithipunal


ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுவேன் என்று சீமான் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்து உள்ள நிலையில் நாளை ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலும் ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட மக்களிடத்திலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

 இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சி.பா ஆதித்தனாரின் நினைவு நாளை ஓட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்திகளை சந்தித்து சீமான் பேசுகையில், கோரமண்டல் நச்சு ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழர்களை திருடர்கள் என்று கூறும் மோடி ஏப்ரல் 19ஆம் தேதிக்கு முன் இதை பேசியிருக்க வேண்டியதுதானே, தென் மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருவதாக அண்ணாமலை நம்புகிறாரா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சீமான், ஜூன் 4ம் தேதிக்கு பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து பெரும் வாக்கு எவ்வளவு என்று தெரிந்துவிடும். கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து வாங்கும் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விட்டு செல்வேன் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp get more than vote ntk dissolved ntk party by seeman


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->