அழிவைத் தேடிக் கொள்ளும் அண்ணாமலை.. தமிழக பாஜகவில் புதிய சர்ச்சை..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல் பெருகிவரும் நிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தபோது" என நேற்று இரவு புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.

அதே பதிவை ரீட்விட் செய்த பாஜக மாநில நிர்வாகியான செல்வகுமார் என்பவர் "அண்ணன் கல்யாணராமன் அவர்கள் அதிமுகவில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்பவர் என நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். கல்யாணராமன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என குறிப்பிட்டு பதிவிட்டதை செல்வகுமார் விமர்சனம் செய்ததற்கு பாஜக ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "சம்பந்தப்பட்டவரு மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு சொல்றாரு, மாநில பொறுப்புல இருக்கிறவரை இப்படி பதிவு போட சொல்லி அண்ணாமலை நிர்பந்திக்கிறாரு, தன் அரசியல் அழிவை தானே தேடிக் கொள்கிறார் அண்ணாமலை, இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமேயில்லை" என ரீட்விட் செய்துள்ளார். தமிழக பாஜக மாநில நிர்வாகி செல்வகுமாரின் விமர்சனம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்திணையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தனது பதிவை நீக்கி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive meets EPS created new controversy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->