அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தல்... திமுக எம்எல்ஏவுக்கு தொடர்பு.. திமுக இளைஞரணி நிர்வாகி கைது! அண்ணாமலை பகீர்!
BJP Annamalai Amman Statue Robbery DMK MLA
பாஜக அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே, பல நூறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த, திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விக்னேஷ் என்பவர், ஓட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்தச் சிலை கடத்தலில், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ஆனால், திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இந்த சிலை கடத்தல் வழக்கில், திரு. சண்முகையா இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரியவருகிறது.
யாராக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Amman Statue Robbery DMK MLA