திருதராஷ்டிரன் நிலைதான்.. மகாபாரதத்த முழுசா படியுங்கள்.. ஸ்டாலினுக்கு பாஜக அட்வைஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாள் விழா மேடையில் மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறார்களா?  என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறார்களா? - முதல்வர் மு.க ஸ்டாலின்.

அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் திரு.ஸ்டாலின் அவர்களே! மகாபாரத்தில் கௌரவர்கள் ராஜ்யத்தில் பாஞ்சாலியின் மானத்தை காப்பாற்ற வாய்ப்பு இருந்தும் கடமையை நிறைவேற்ற தவறிய திருதராஷ்டிரன் இருப்பதால் தான் திமுக அரசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இருந்தும் தடை செய்ய மறுத்தீர்களா?

மகாபாரதத்தில் தவறு என்று தெரிந்தும் புத்திர பாசத்தால் துரியோதனன் செய்த அநியாயங்களை முறைகேடுகளை அனுமதித்த திருதராஷ்டிரன் இருப்பதால் தான் உங்கள் அரசில் நடைபெறும் தவறுகளை முறைகேடுகளை தட்டிக் கேட்க மறுக்கிறீர்களா?

மகாபாரத்தில் விதுரன் கூறிய நியாயத்தை நீதியை ஏற்க மறுத்து உதாசீனப்டுத்திய திருதராஷ்டிரன் இருப்பதால்தான் தமிழக பாஜக சுட்டிக்காட்டும் நியாயத்தை நீதியை ஏற்க மறுக்கிறீர்களா? திரு.ஸ்டாலின் அவர்களே மகாபாரத்தை முழுமையாக கற்றறியுங்கள்.

நெறி தவறி நீதிக்கு புறம்பாக தன் மக்களின் நலனுக்காக நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்து கொள்ளுங்கள். திருத்திக்கொள்ளுங்கள். ராமாயணம் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று போதிக்கிறது.

மகாபாரதம் ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்று போதிக்கிறது. மகாபாரதத்தை முழுமையாக படியுங்கள் தெளிவு பெறுங்கள் மு.க ஸ்டாலின் அவர்களே!" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Advice to Stalin read Mahabharata fully


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->