திமுக உடன் கூட்டணியா? இல்லையா? நேரம் குறித்த வைகோ! அதிரடிச் செய்தியாளர் சந்திப்பு!
Vaiko to Announce Alliance Stance and General Council Decisions Tomorrow
தமிழக அரசியல் வட்டாரத்தில் திமுக மற்றும் மதிமுக இடையேயான கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவலான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை (ஜூன் 27) மாலை 3:30 மணிக்கு மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். சென்னையில் நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவுகளை இந்தச் சந்திப்பில் அவர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
கூட்டணி விலகல் குறித்த எதிர்பார்ப்பு
சமீப நாட்களாகத் திமுக தலைமைக்கு எதிராக வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் கடுமையான விமரிசனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவைச் சுயமரியாதையிழந்துக் கட்டாயத்தின் பேரில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வைத்தது மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து வைகோ அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில், தற்போதைய முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தவெக அரசின் செயல்பாடுகளை மதிமுக தலைவர்கள் பாராட்டிப் பேசி வருவது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
நாளை வெளியாகும் இறுதி முடிவு
இந்தச் சூழலில், நாளை நடைபெறவுள்ள பொதுக்குழுவே கட்சியின் எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். எனவே, இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறதா அல்லது தவெக அரசுக்கு ஆதரவளிக்கப் போகிறதா என்பது போன்ற மிக முக்கியமான, அதிரடி அரசியல் முடிவுகளை வைகோ நாளை மாலை 3:30 மணிக்குத் திட்டவட்டமாக அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vaiko to Announce Alliance Stance and General Council Decisions Tomorrow