மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்!- மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
Birthday Maveeran Azhugamuthukon Chief Minister showered flowers occasion and tvk leader Vijay extended his greetings
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :
இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ''மாவீரன் அழகு முத்துக்கோன்'' பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இவர் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போரிட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்:
விஜய் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன்.
தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Birthday Maveeran Azhugamuthukon Chief Minister showered flowers occasion and tvk leader Vijay extended his greetings