பாஜக எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு! இரு வருட சிறைத்தண்டனை! பறிபோகும் பதவி?!
Bihar BJP MLA case judgement
பீகார் தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மிஷ்ரி லால் யாதவ், 2019ல் ஏற்பட்ட தாக்குதல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அவர் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாத சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விபரப்படி, பக்கத்து வீட்டுக்காரரை தாக்கி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக எம்.பி.–எம்.எல்.ஏ. நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
தண்டனை குறித்து எம்.எல்.ஏ. மிஷ்ரி லால் கூறுகையில், "நீதிமன்ற முடிவுக்கு மதிப்பு கொள்கிறேன். ஆனால் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவு வரும் பின்னர் தகுதி நீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் சட்டமன்ற செயலாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Bihar BJP MLA case judgement