பெரும் பதற்றம்: பாஜக தலைவர் சுட்டு படுகொலை!
Bihar BJP Leader gunshot
பீகார்: பாட்னா நகரின் ஷேக்புரா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.வின் கிசான் மோர்ச்சா தலைவர் சுரேந்திர கெவத் (52) மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயலுக்கு சென்று கொண்டிருந்த அவர், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினார். அவரின் உடலில் நான்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
பாதிக்கப்பட்ட அவரை உடனே பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பாட்னா நகரில் ஒரு வாரம் முன்பு தொழில் அதிபர் கோபால் கெம்கா அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, பீகார் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை மோசமடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.