பீகார் தேர்தல் 2025: காலை 9 மணிவரை 13.13 சதவீத வாக்குகள் பதிவு!
Bihar Assembly Election 2025
பீகார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்தில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கட்டத்தில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்கின்றனர். அதேசமயம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 11-ந்தேதி நடைபெறும். இன்று மற்றும் 11-ந்தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் எண்ணிக்கை வருகிற 14-ந்தேதி ஒரே நாளில் மேற்கொள்ளப்படும்.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் பெருமளவில் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக உரிமையைச் செலுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் பெண்கள் மற்றும் முதியவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்களிக்க வரிசையில் நிற்பது காணப்படுகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், சஹர்சா மாவட்டம் 15.27 சதவீதம் என அதிகபட்ச வாக்குப்பதிவைப் பெற்றுள்ளது. இதேசமயம், லக்கிசராய் மாவட்டத்தில் 7 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்று மந்தமான நிலை காணப்படுகிறது.
வாக்குப்பதிவுகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 40,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Bihar Assembly Election 2025