அயோத்தி நிலம் இந்துகளுக்கே சொந்தம்.! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!    - Seithipunal
Seithipunal


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6 ஆம் இறுதி விசாரணையை தொடங்கியது, கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னாள் அங்கு ஒரு கட்டிடம் இருந்ததுள்ளது அந்த கட்டிடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது கிடையாது என்ற தொல்லியல் துறையின் அறிக்கையை இந்த வழக்கில் நிராகரிக்க முடியாது. 

ராமர் பிறந்த மண் அயோத்தி என்ற இந்துக்கள் நம்புகின்றனர், இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது, அதேசமயத்தில் நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது  

பாபர் மசூதி உள்ள இடம் முழுக்க தங்களுக்கு சொந்தமானது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை, மேலும் தொழுகை நடத்த மசூதி தான் ஒரே இடம் என இஸ்லாமியர்கள் நம்புவதில்லை. 

அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தமானது 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலை கட்டலாம் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayoti land is only for hindu


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal