பஹல் காமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனத்தை உருவகம்! - பிரதமர் மோடி
attack in Pahalgam is an epitome of cowardice Prime Minister Modi
டெல்லி பாராளுமன்றத்தின் மக்களவையில் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவாதத்தில் 'பிரதமர் நரேந்திர மோடி' பங்கேற்று பதிலளித்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்தியாவின் வலிமையை பறைசாற்றிய நடவடிக்கை.140 கோடி மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கவே பாராளுமன்றம் வந்துள்ளேன்.
நான் அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நிறைவேற்றி உள்ளேன்.பஹல்காமில் மதத்தின் பெயரால் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனத்தின் உருவகம்.நமது ஒற்றுமை எதிர்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கி விட்டது.இந்திய படைகளின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடினர்.
ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்கள் பின்னால் நின்றோம்.பயங்கரவாதிகளின் தலைமை இடங்களை இந்திய ராணுவ வீரர்கள் தகர்த்தனர்.பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயில் பலனளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
English Summary
attack in Pahalgam is an epitome of cowardice Prime Minister Modi