சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு…! பின்னணியில் நடைபெறும் ரகசிய ஆலோசனைகள்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான காலக் கடிகாரம் வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. இன்னும் ஐந்து மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

ஆளும் தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன், இந்த முறை புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள த.வெ.க.வும் முழுவீச்சில் களம் காண்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசியல் அரங்கில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.

“ஆட்சியில் பங்கு” என த.வெ.க. தலைவர் விஜய் வெளிப்படையாக அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. த.வெ.க. ஆட்சியமைக்கும் சூழல் உருவானால், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை த.வெ.க. தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. அ.ம.மு.க. மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் த.வெ.க. அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தே.மு.தி.க., பா.ம.க. (அன்புமணி) உள்ளிட்ட கட்சிகளுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பின்னர் வேட்பாளர் நேர்காணல்களை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியலை அவர் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பெண்களுக்கு, 40 சதவீதம் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில பிரபல திரையரங்க உரிமையாளர்கள் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தை பொங்கலுக்கு பின்னர் வேட்பாளர் தேர்வை இறுதி செய்து, உடனடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு நடுவே, புதிய அரசியல் சக்தியாக த.வெ.க. மேற்கொள்ளும் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு காஞ்சீபுரத்தில் தனியார் கல்லூரி உள் அரங்கில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் மூலம் மக்களை சந்தித்தார்.எதிர்வரும் நாட்களில் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் தொடர்ச்சியான பிரசாரத்தை மேற்கொள்ள உள்ள விஜய், ஜனவரி இரண்டாவது வாரம் வரை முழுவீச்சில் அரசியல் பயணத்தை தொடர உள்ளார்.

சட்டசபை தேர்தலில் த.வெ.க. எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதனால், தமிழக அரசியல் மேடை தினந்தோறும் புதிய திருப்பங்களை சந்தித்து, பரபரப்பாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

assembly elections approaching alliance talks TVK underway Secret consultations taking place behind scenes


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->