வேப்பூர் பகுதிக்கு வருகை தரும் விஜய பிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு!
Arrangements are made to give a warm welcome to Vijay Prabhakaran who is visiting the Veppur area
வேப்பூர் பகுதிக்கு வருகை தரும் விஜய பிரபாகரன், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி காடாம்புலியூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தனியார் திருமண மஹாலில் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ப.சிவகொழுந்து, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜூலை 28.2025 கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட வேப்பூர் பகுதிக்கு வருகை தரும் விஜய பிரபாகரன், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் எம். செல்வமணி . மாநில கேப்டன்மன்ற செயலாளர் பி. ராஜாசந்திரசேகர், ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார். நெய்வேலி சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சிவமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட தொழில் செயலாளர் சிவரஞ்சனி, செயசங்கர், மாவட்ட அவைத் தலைவர் எஸ். ராஜாராம், மாவட்ட பொருளாளர் ஏபி. ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் டி. ஹரிதாஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் டி. வேலு, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே. ஆனந்தராமன், பொருளாளர் கே சத்யராஜ்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோசுரேஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராசவேல், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நெய்வேலி நகர செயலாளர் கே. முருகன்,
ஒன்றிய துணை செயலாளர்கள் முருகன், சுரேஷ், பாலசுப்ரமணியன்,மாவட்ட பிரதிநிதி ஜோதிநாதன், ராஜதுரை, ராஜேந்திரன், மற்றும் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Arrangements are made to give a warm welcome to Vijay Prabhakaran who is visiting the Veppur area