விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட பரபரப்பு காட்சி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 ராணுவ வீரர்களுடன் சென்றார். குன்னூர் அருகே காட்டேரி மலைபாதையில் பயணித்த போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அங்கிருந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 13  ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.

இன்று அவர்களின் உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்படும் முன்னதாக தற்போது நீலகிரி வெலிங்டனில் இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற சில பயணிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது. பனிமூட்டம் நிறைந்த பகுதியில் தாழ்வாக இராணுவ ஹெலிகாப்டர் சென்று மறையும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army Helicopter Crash Last Minute Video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->