தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண்மை இயக்குநராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தாரேஸ் அகமது, அனு ஜார்ஜ், உதயச்சந்திரன் உள்ளிட்ட 05 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண்மை இயக்குநராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது;

'கைடன்ஸ்' (GUIDANCE) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த டாக்டர் தாரேஸ் அகமது, தற்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய அனு ஜார்ஜ், தற்போது கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் துறை மற்றும் வர்த்தகத் துறையில் சிறப்புச் செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் இப்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய உதயச்சந்திரன், தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த குமார் ஜெயந்த் இப்போது தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று குறிப்பிடபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayachandran has been appointed as the Managing Director of the Tamil Nadu Industrial Investment Corporation


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->