பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் கெஜ்ரிவால்.!!
Aravind Kejriwal to meet Congress leaders against BJP
புதுடெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் தொடர்பாக வழக்கில் சட்டம் ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகத் தொடர்பாக முடிவெடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகும் வகையில் டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் அமல்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பின்போது தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொழுது மத்திய அரசு கொண்டு வரவுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் வாக்களிக்கும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார்.
English Summary
Aravind Kejriwal to meet Congress leaders against BJP