திமுக கூட்டத்தில் உதயநிதியை இப்படி அடித்திருந்தால் காவல்துறை வேடிக்கை பார்க்குமா? அறப்போர் இயக்கம் கேள்வி!
Arappor Iyakkam DMK Govt MK Stalin nellai incident
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இதே போல திமுக நடத்தும் கூட்டத்தில் 25 பேர் நுழைந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை அடித்திருந்தால் காவல்துறை இப்படித்தான் அந்த குண்டர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா?
சபாநாயகர் அப்பாவு தொகுதியில் நடைபெறும் சட்ட விரோத குவாரிகள் பற்றி பேசியவுடன், கலவரத்தை துவக்கிய இந்த குண்டர்கள் கும்பலுக்கும் அப்பாவு அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? அவருடைய உத்தரவின் பெயரில் தான் இந்த குண்டர்களை நெல்லை காவல்துறை பாதுகாக்கிறதா?
இவர் தான் தமிழ்நாட்டின் சபாநாயகர். இவருடைய தொகுதியில் தான் அதிகமாக சட்ட விரோத குவாரிகள் செயல்படுகிறது. இவருடைய தொகுதியில் சட்ட விரோத குவாரிகளால் மக்கள் படும் கஷ்டங்களை ஆவணப்படுத்தும் போது தான் 25 குண்டர்கள் அறப்போர் கூட்டம் நடக்கும் இடத்தில் வன்முறை செய்து உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதுவும் காவல்துறை முன்நிலையிலேயே இந்த தாக்குதலை அரங்கேற்றினார்கள்.
சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்பவர்களை விரட்டி விரட்டி கைது செய்யும் தமிழக காவல்துறை வன்முறை செய்த குண்டர்களில் ஒருவரை கூட இது வரை ஏன் கைது செய்யவில்லை? என்று காவல்துறை அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் சொல்லவேண்டும்.
ஆனால் அவர் இதை பற்றி எல்லாம் பேசமாட்டார். தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவது பற்றி அவருக்கு என்ன கவலை இருக்க போகிறது? பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலத்தில் வீடுகள் கட்ட அனுமதி கொடுத்தவர் தானே அவர்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Arappor Iyakkam DMK Govt MK Stalin nellai incident