யார் இந்த நாராயணன்? யாரை காப்பாற்ற இந்த மவுனம்? திமுக நிர்வாகி குறித்து அறப்போர் இயக்கம் விடுத்த அதிர்ச்சி அறிக்கை! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் அடங்கிய பவானி கல்விக்குழும தாளாளர் நாராயணன் அவர்களை, கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்?

அவர் ஒரு திமுக உறுப்பினர். திமுக கல்வியாளர் அணியின் துணைத்தலைவர். கட்சி உறுப்பினரை ஒரு பல்கலைக்கழக convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்? ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் கூட பல்கலைக்கழகத்தில் இல்லாத அவல நிலையில் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் தங்கள் கட்சி உறுப்பினரை உயர் பொறுப்பில் நியமித்து அதன் மூலம் என்ன சாதிக்க முயற்சி செய்தார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்? 

பல்கலைக்கழக convenor கமிட்டிகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களாவது இருப்பார்கள். ஆனால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் திமுகவின் நாராயணன் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்லூரிகளை நடத்துவதில் ஸ்டாலின் அரசு எத்தனை அலட்சியம் காட்டி இருக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

விஜய் அரசு இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறது? திமுக உறுப்பினரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்ந்து சீரழிய அனுமதிக்க போகிறதா? உடனடியாக சீர் செய்ய வேண்டிய இந்த விஷயத்தை பற்றி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? யாரை காப்பாற்ற இந்த மவுனம்?
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arappor iyakkam condemn to dmk and mk stalin


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->