காங்கிரஸ் கட்சிக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லவே இல்லையா? செல்வப்பெருந்தகை விவகாரத்தில் பாஜக கேள்வி!
bjp condemn to congress selvaperunthagai
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சட்டசபையில் முதலமைச்சர் திரு.ஜோஸப் விஜய் அவர்களின் சைகையை, பேச்சை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, மு.க.ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து பேசி, திமுக விற்கு வாக்களிக்கவில்லை என்று மக்கள் கதறி கதறி அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் த வெ க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் பழைய நட்பை மறக்கக்கூடாது என்றெல்லாம் கூறி த வெ க அரசை கண்டித்திருக்கிறார்.
இப்படி ஒரு அரசில் காங்கிரஸ் அங்கம் வகிப்பது வெட்கக்கேடல்லவா? அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்னும் செல்வப்பெருந்தகை நீடிப்பது அதை விட வெட்கக் கேடல்லவா? சொந்த கட்சியின் அரசை விமர்சிக்கும் ஒருவரை மாநில தலைவராக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லவே இல்லையா?
அவரின் மாறும் ஒரு செய்திக்குறிப்பில், "சுதந்திர இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி செய்து ஊழல்கள் பல செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ் கட்சி இப்போது கர்நாடக மாநிலத்தில் இறந்து போனவர்களின் பெயர்களில் மோசடி செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் முக்கிய திட்டமான கிரஹ லக்ஷ்மி திட்டத்தின் படி, தகுதியான ஏழை குடும்பங்களின் பெண் தலைவிக்கு மாதம் ரூபாய்.2000/- நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தது. 2023-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர். இந்த திட்டத்தில் மாபெரும் முறைகேடுகளை நிகழ்த்தியுள்ளது சமீபத்திய தணிக்கை துறையின் அறிக்கையில் வெளிவந்துள்ளது.
இறந்து போன சுமார் 1,48,000 பெண்களின் வங்கிக் கணக்கில் சுமார் 128 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டிருக்கிற நிலையில், ATM அட்டை மூலம் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 19,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளின் கணக்குகள் ஒரே வங்கி கணக்கில் இணைக்கப்பட்டு ரூபாய்.60 கோடிக்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், 9000 வங்கிக் கணக்குகளில் திரும்ப திரும்ப பணம் போடப்பட்டுள்ளதோடு, 23,000 பயனாளிகளின் வங்கி விவரங்கள் இல்லாமல் சுமார் 46 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றும் 10 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்குகள் மாற்றப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் மூலம் 225 கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
மக்கள் நலத்திட்டம் என்று சொல்லி பெண்கள் பெயரில் மோசடி செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறது காங்கிரஸ். இந்த மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும்.
English Summary
bjp condemn to congress selvaperunthagai