உங்க பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்து கொள்ளுங்கள்! அறப்போர் இயக்கம் கடும் கண்டனம்!
Arapor Iyakkam Condemn to TN Police DMK
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மார்ச் 1 ஆம் தேதி போட்ட புகார் மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உங்களுக்கெல்லாம் எதற்கு எங்கள் வரிப்பணத்தில் சம்பளம்??.
இன்று வரை பேனர்கள் அங்கேயே தான் உள்ளது. நிகழ்வு முடிந்து பொறுமையாக திமுக ஒப்பந்ததாரர்களே வந்து பேனர்களை எடுக்க நீங்கள் காத்திருக்கிறீர்களா?
ஆணையர் குமரகுருபரன் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறாரா அல்லது திமுகவில் சம்பளம் வாங்குகிறாரா?
உங்களால் சட்டவிரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் குமரகுருபரன் IAS, அருண் IPS, சங்கர் ஜிவால் IPS மூன்று பேரும் உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் போய் இணைந்து கொள்ளுங்கள்!
எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் வேண்டுமென்றால் சட்டப்படி வேலை செய்யுங்கள்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
English Summary
Arapor Iyakkam Condemn to TN Police DMK