சந்தி சிரிக்கும் திமுகவின் மோசமான ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! - எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான ''எடப்பாடி பழனிசாமி'' கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி:

அப்போது அவர் தெரிவித்ததாவது," 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தவர் முதலமைச்சர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை பெற்றிருக்கலாம்.அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.ஆட்சிக்கு வந்தபிறகு வெள்ளைக்குடை பிடித்து சென்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு.தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றிருக்கிறது.

அதனால் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.அரக்கோணத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தி.மு.க. நிர்வாகி தெய்வசெயல் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் முன்ஜாமின் பெற காவல்துறையை துணை புரிகிறது.மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதற்கு அரக்கோணமே சாட்சி என்றார்" எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தோர், கரகோஷம் எழுப்பி தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arakkonam is a witness to bad governance of DMK Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->