நாளை தாக்கல் செய்யப்படும் இரு அறிக்கைகள் - சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்தாவது, "தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரங்கல் தெரிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்ற கூட்டம் தொடங்கும். அதில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கூடுதல் நிதிக்கான வரவு செலவு திட்டத்தினை நிதி அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

தொடர்ந்து இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்கான ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, விவாதிக்கப்பட உள்ளது.

நாளை மறுநாள் கூடுதல் செலவினத்துக்கான கோரிக்கையின் மீது விவாதம், பதிலுரை, வாக்கெடுப்பு நடைபெறும். நாளையும் நாளை மறுநாளும் முழுமையாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். இரண்டு நாளும் கேள்வி நேரம் உண்டு.

இந்த கூட்டத் தொடரில் நாளை 2 அறிக்கைகள் வைக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையும் வைக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நான்கு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இரண்டு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் உறுப்பினராக இருப்பதால், ஓ பன்னீர்செல்வம் அதில் கலந்து கொண்டார்" என்று அப்பாவு தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Appavu Say About 2 day Assembly meet


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->