அதிமுகவின் தற்போதைய கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியா..? சி.விஜயபாஸ்கரா..?; சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு அப்பாவு கேள்வி..!
Appavu questions Speaker JCD.Prabhakar Is Agri Krishnamurthy or C Vijayabaskar the current AIADMK Whip
அதிமுக கொறடா யார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியா..? சி.விஜயபாஸ்கரா..? என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு திமுகவின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க 13.05.2026 பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கட்சி கொறடா உத்தரவையும் மீறி ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர், சபாநாயகரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த மன்னிப்பை ஏற்று தகுதி நீக்கத்தை ரத்து செய்ததாக பேரவை தலைவர் அறிவித்துள்ளார். அதே புகார் மனுவில் கூறப்பட்ட மீதி 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலுமணி அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தற்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏவா? அல்லது விஜயபாஸ்கர் எம்எல்ஏவா? அறிவிப்பு சரியா, அறிவிக்கையாக, notification-ஆக வெளியிடப்பட வேண்டாமா? எடப்பாடி condon மட்டுமே செய்துள்ளார். தகுதிநீக்க மனுவை திரும்பப்பெறவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Appavu questions Speaker JCD.Prabhakar Is Agri Krishnamurthy or C Vijayabaskar the current AIADMK Whip