அதிமுகவிற்கு மீண்டும் மெகா சரிவு! திமுகவில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்!
Another mega collapse AIADMK! More than 50 executives join DMK
அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருதுநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் எம். சித்திக் தலைமையில், மு. ரஜிஸ்அகமத், எம். கோபிநாத், இமாம் அலி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், திருச்சுழி தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்னுத்தம்பி, திருச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தனபாண்டி, காரியாபட்டி நகரச் செயலாளர் ஆர்.கே. செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
English Summary
Another mega collapse AIADMK! More than 50 executives join DMK