'திமுக கூட்டணி உடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது: 2026 தேர்தல் அவர்கள் வரலாற்றில் மோசமாக இருக்கும்': அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாளும் தி.மு.க., மெல்ல மெல்ல கீழே போய் கொண்டு உள்ளதாகவும், கூட்டணி கூட உடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளது என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: 

கூட்டணியை பற்றியும், கட்சியை பற்றி தனது கருத்துகளை பல முறை கூறியுள்ளேன் என்றும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்  கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவரது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் நாட்டுக்கு பல சேவை செய்துள்ளார். அவர் நன்றாக இருக்க வேண்டும் எனவும், அவர்  குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்த மகளிர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் போலீசார் ஒரு தலை பட்சமாக இல்லாமல், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யார் தவறு செய்தாரோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் உள்ளதால், ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பேசி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரும் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், போலீசார் ஒரு பக்கம் கோபத்தை சம்பாதித்து கொள்வார்கள் என்றும் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கோபத்தை சம்பாதித்து கொள்வார்கள் எனவும், இதனால் அதுபோல் நடக்காமல் ஜாக்கிரதையாக கவனமாக இருக்க வேண்டும் என்றும் நிருபர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகள் வரும் போது, மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் புது நிர்வாகிகள் வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, வேலை செய்தவர்கள், ஒன்றிய, மாவட்ட அளவில் புதியவர்களுக்கு வழிவிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பா.ஜ.,வுக்கு ஒரு காலக்கெடு உள்ளதாகவும், இரண்டு முறை பணியாற்றியவர்கள் மாற்றுகிறதாவும், இந்த முறை ஒன்றிய, மாவட்ட தலைவர்களுக்கு 45 வயது என்ற காலக்கெடு வைத்து இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து இடங்களிலும், பழைய நிர்வாகிகளும், புதிய நிர்வாகிகளும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டையும், கட்சியையும் சார்ந்து தொண்டர்கள் பணி செய்கின்றனர். அவர்களில் பழையவர்கள், புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பணி செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் சரியாக போய் கொண்டு உள்ளது என்றும், தி .மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் தெள்ளத் தெளிவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவும், ஒவ்வொரு நாளும் தி.மு.க., மெல்ல மெல்ல கீழே போய் கொண்டுள்ளது. கூட்டணி கூட உடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. வரும் 2026 தேர்தல் வரலாற்றில், தி.மு.க.,வுக்கு மோசமாக இருக்கும் எனவும், அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, மாநில வளர்ச்சியின் கோட்டை விட்டுள்ளார்கள் என்று நிருபர்களிடம் அண்ணாமலை மேலும் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai says signs of DMK alliance starting to emerge


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->