மீண்டும் லைம்லைட்டிற்கு வந்த அண்ணாமலை.. சைலன்ட் ஆன நயினார் நாகேந்திரன்! குஷியில் அண்ணாமலை ஆதரவாளர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசியலில் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை மீண்டும் கவனத்தின் மையமாகி உள்ளார். சில மாதங்கள் அமைதியாக இருந்த அவர், கடந்த வாரம் முதல் தொடர் பேட்டிகள் மூலம் அரசியல் சூட்டை அதிகரித்து வருகிறார். இதேசமயம், தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அமைதியாக இருப்பது, “பாஜக உள்ளகத்தில் ஏதும் மாற்றமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வரலாறு காணாத தோல்வியை முன்வைத்து அண்ணாமலை, “அதே நிலை 2026-ல் தமிழ்நாட்டிலும் நிகழும்” என்று சுட்டிக்காட்டினார். குடும்ப அரசியலுக்கு மக்கள் விருப்பமில்லை என்றும், அதிமுக-பாஜக இணைந்த NDA கூட்டணி 2026ல் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் திடீரென திருமண விழாவில் அண்ணாமலையுடன் பேசிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி மீண்டும் உயிர்பெற வாய்ப்பா, அல்லது வேறு பேச்சுகளா என்ற யூகங்கள் தீவிரமாகின்றன.

முதல்வர் ஸ்டாலின் பிரதமரை வரவேற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை மீண்டும் முன்வைத்துள்ளார். “மத்திய– மாநில உறவை புறக்கணிப்பதால் தமிழகத்துக்கு நன்மைகள் தடைப்படுகிறது” என்றும் அவர் தாக்கியுள்ளார். கோவை–மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்த விவகாரத்திலும், முதல்வர் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் சில வாரங்களாக அமைதியாக இருப்பதும், அண்ணாமலை மீண்டும் முன்னிலையில் பேசத் தொடங்குவதும் பாஜக உள்ளகத்தில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்ற அரசியல் கிசுகிசுவை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai returns to the limelight Nayinar Nagendran goes silent Annamalai supporters are overjoyed


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->