சீனியாரிட்டி பட்டியலில் 09-வது இடத்தில் இருப்பவருக்கு பொறுப்பு டிஜிபி..?இப்படிப்பட்ட லட்சணத்தில் அரசு இருந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்..? அண்ணாமலை காட்டம்..! - Seithipunal
Seithipunal


சங்கர் ஜிவால் பணி ஓய்வை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்த டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ''சீனியாரிட்டி பட்டியலில் முதல் எட்டு இடத்தில் இருப்பவர்களை விட்டு, ஒன்பதாவது இடத்தில் இருப்பவரை பொறுப்பு டிஜிபியாக நியமித்தால் போலீஸ் துறை எப்படி விளங்கும்,'' என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் இந்து முன்னணி சார்பில் நடந்த 162 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழாவில் கலந்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் அங்கு பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: 

திமுக ஆட்சிக்கு வந்து 04 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது பிரிவு உபசார விழா வைப்பார்கள். அவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் 2026 மே மாதம் ஓய்வு பெற போகிறார். அதனால், அவரே பிரிவு உபசார விழாவாக குடும்பத்தோடு ஜெர்மனிக்கும், லண்டனுக்கும் போயிருக்கிறார். மேலும், அவரே ஒரு பார்ட்டி அளித்துவிட்டு போயிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். 


.
அத்துடன், அவர் குறிப்பிடுகையில், தமிழகத்தில் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற உடன் புது டிஜிபி பதவிறே்க வேண்டும். அவருக்கு பிறகு பதவி மூப்பில் 06 பேர் உள்ளனர். ஆனால், அதில் முதல் 03 இடத்தில் உள்ளவர்களில் ஒருவர் பதவி ஏற்க வேண்டும். பதவி மூப்பில் 09வதாக இருக்கும் நபர் டிஜிபி ஆக முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், பொறுப்பு டிஜிபியை நியமித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு கிளம்பிவிட்டார். அப்படி இருக்கும் போது காவல்துறை எப்படி விளங்கும்.? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிகாரிகள் மீது மரியாதை இருக்க வேண்டும். உயர் அதிகாரிகள் மீது கீழ் இருக்கும் அதிகாரிகள் மரியாதை அளிக்க வேண்டும். பட்டியலில் முதல் 08 இடத்தில் இருப்பவரை விட்டுவிட்டு 09-வது இடத்தில் உள்ளவர் பொறுப்பு டிஜிபி ஆக நியமிக்கப்படுகிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், புதிய டி.ஜி .டி. பதவியேற்கும் நிகழ்வில் முதல் 08 இடங்களில் இருக்கும் அதிகாரிகள் செல்லவில்லை. எப்படி காவல்துறை விளங்கும்? அவர்களுக்குள் கட்சி சண்டை கோஷ்டி மோதல் எனவும் விமர்சித்துள்ளார்.

அவர்களுக்குள் திமுக , அந்த கட்சி, இந்த கட்சி என குரூப்பிசம் இருந்தால் எப்படி மக்களை பாதுகாக்க முடியும்? என்றும்,  கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள். மேல் மட்டத்தில் இருந்து யாரும் பேசுவது இல்லை. அவர்களின் கைகளை கட்டிவிட்டு ஓடு என்றால் எப்படி ஓட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். காலையில் இருந்து எந்த அரசியல் கட்சியும் இதை பற்றி பேசவில்லை. மிகப்பெரிய தவறு என்றும், இதற்குமுன்பு இந்த மாதிரி தவறு நடந்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தைரியமாக பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்துவிட்டு ஜெர்மனிக்கு முதல்வர் சென்றுவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்ட 31 நகரங்களில் சென்னை 21-வது இடத்தில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடுவது கிடையாது. கலவரத்தை ஏற்படுத்துவது அரசு தான். அதற்கு பலிகடா போலீசார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாதிரியான பொறுப்பு டிஜிபியை போட்டால் எப்படி போலீசார் கட்டுப்பாட்டுடன் மற்றவர்களை கேட்பார்கள் என்றும் கேள்வி எழுப்பிய அண்ணாமலை , 08 பேரும் பங்கேற்கவில்லை என்றால், ஆலோசனை கூட்டங்களில் ஒருவரை ஒருவரிடம் எப்படி பேசுவார்கள் என்றும்,  இப்படிப்பட்ட லட்சணத்தில் அரசு இருந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்..? என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai questioned how law and order would be if the person who is 09th in the seniority list is appointed as the DGP in charge


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->