சூடு பிடிக்கும் அரசியல் களம்.! ரெடியாகும் பாஜக பட்டியல்... அதிரடி காட்டும் அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தேமுதிக, பாமக, தமாக, அமமுக ஆகிய கட்சிகளை உள்ளிழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இருப்பினும் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்ட இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த கட்ட பணிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழகத்தில் உள்ள 39 நான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் தொகுதியில் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த பணியானது ஜனவரி மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், பட்டியலை தயாரித்து டெல்லி தலைமைக்கு அனுப்பவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பரபரப்பான இந்த அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை தேனி தொகுதி எம் பி யும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai project bjp list preparation completed by month


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->