தமிழக அரசு எடுக்கும் முடிவிற்கு தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.. அண்ணாமலை பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார்.

அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தை ஆளும் திமுக செய்துவரும் ஊழல் குறித்து கூறினால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்து வாயை அடைத்து விட முடியும் என்று நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. உறுதி செய்த பின்பு ஊழல் தொடர்பான இரண்டாவது பட்டியலை விரைவில் வெளியிடுவேன். அந்தப் பட்டியலில் முதல் பட்டியலை விட பத்து மடங்கு அதிகமானதாக இருக்கும். ஆதினம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கையை மிரட்டும் தொனியில் உள்ளது. 

மதுரை ஆதீனம் மீது அமைச்சர் கங்கணம் கட்டிக் கொண்டு பேசி வரும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியலைத் தாண்டி இருக்கக்கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை திமுகதான் உருவாக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai press meet mekedatu issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->