அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாமக்கலில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவும், பாஜகவும் ஒரே நேர்கோட்டில் செல்கிறது. மாநில அரசு கடந்த ஆறு மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை மக்களுக்காக செய்தது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி அரசின் திட்டத்தை காப்பி எடுத்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மாநில அரசு சுயமாக எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தினசரி நடைபெறும் கொலை சம்பவங்களை உதாரணம். தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதே தற்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்காக உள்ளது. 

1994-ல் கள்ளச்சாராயம் காய்ச்சி கைதாகி குண்டாசில் சிறையிலிருந்த அமைச்சர் காந்தி என்னை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது. கோமாரி நோய் தடுப்பூசி மத்திய அரசு தரவில்லை என மாநில அமைச்சர் கூறுவது பொய். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான கோமாரி நோய் தடுப்பூசி மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியில் இருந்து யார் விலகினாலும், பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai press about aiadmk alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->