மு.க ஸ்டாலின் "கொலை குற்றவாளியை" கட்டியணைக்கிறார்.!! - போட்டு தாக்கிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பொதுமக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை கட்டி அமைப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.

இது ரொம்ப பேசிய அவர் "மோடி அய்யாவின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம். சைனாவாக இருக்கட்டும் பாகிஸ்தானாக இருக்கட்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்தியாவுக்கான பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். 

ஆனால் இங்கு இருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையான பிறகு அவங்கள கட்டி புடிச்சிட்டு இருக்காரு. இதுதான் தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய முதல்வரா? ஆனால் இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார்" என் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai alleged mkStalin hugged Rajiv Gandhi criminals


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->