ஞானசேகரனுக்குச் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதால் குண்டர் சட்டம் ரத்து!
Anna University Harassment case Madras HC new order
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், குற்றவாளியான ஞானசேகரனுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்த நிலையில், அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம் ரத்து:
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, முதலில் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால், அதே நபரின் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுமையான குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அதன் மேல் ஒரு தடுப்புச் சட்டமான குண்டர் சட்டத்தைத் தொடர்வதில் உள்ள சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Anna University Harassment case Madras HC new order