இன்னும் 8 ஆண்டுகள் தான் உள்ளது - அன்புமணி இராமதாஸ் விடுக்கும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பசுமைத் தாயகம் சார்பில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் காலநிலை மாற்றம் குறித்து 'சென்னை ஓட்டம்' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சித்தார்த், மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில், "காலநிலை மாற்றம் குறித்தான நடவடிக்கையை தமிழகத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே, பசுமைத் தாயகம் சார்பில் இன்று ஒரு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் காலநிலை மாற்றம் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலகத்தை காப்பாற்ற முடியாது என்று, ஐநா சபை எச்சரிக்கை எடுத்துள்ளது. 

இந்த கால நிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், தொழிலாளர்கள் மத்தியில், தொண்டு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

அனைவருக்கும் பொறுப்புள்ளது. அனைவரும் தங்களது கடமையை செய்ய வேண்டும். கிராம ஊராட்சி தொடங்கி அரசாங்கம் முதல், பள்ளி தொடக்கி பல்கலைக்கழகங்கள் வரை தங்களது பொறுப்பை உணர்ந்து விழிப்புணர்வுடன் கடமையை செய்ய வேண்டும்.

இந்த தலைமுறை, நம்முடைய தலைமுறை காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இயற்கையின் அடுத்த கட்ட தாக்குதலை நாம் கட்டுப்படுத்த முடியும். 

கால நிலை மாற்றத்திற்கு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிறைய மரங்கள் நட வேண்டும். பொது போக்குவரத்தாக உள்ள பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். 

காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்து, தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் நாம் மக்களை காப்பாற்ற முடியும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Say About Climate emergency chennai 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->