குரான் என்ன சொல்கிறது? இவருக்கா உங்கள் வாக்கு? இஸ்லாமியர்களுக்கு கேள்வி எழுப்பிய அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, "இந்த பாஜக உடனான பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி முடிவு என்பது அவசியமானது, அது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்து, அதனை மூடியவர் நமது வேட்பாளர் கே பாலு அவர்கள், ஆனால் இந்த அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் மதுக்கடைகளுக்கு மதுவை விற்பனை செய்து கொண்டிருப்பவர். 

அவரிடம் மிகப்பெரிய ஒரு பீர் தொழிற்சாலை உள்ளது. நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம். அது எங்கள் கடமை, எங்களுடைய கொள்கை. அதனை ஒருபோதும் நாங்கள் விட்டுத் தர மாட்டோம். 

புனித குரானில் மது குறித்து கூறியுள்ள மரபுகளை மீறி மதுவை வணிகம் செய்யும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க கூடாது.

கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தடையாக இருந்தது நமது வேட்பாளர் பாலு தொடந்த வழக்கு தான். அந்த வழக்கை வாபஸ் பெற்ற பிறகு தான் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முடிந்தது.

விவசாயிகள் தான் எங்கள் கடவுள். ஆனால், விவசாயிகள் குறித்து அதிமுக, திமுகவிற்கு எந்த கவலையும் கிடையாது. வடிவேலு கிணற்றை காணும் என்ற காமெடியை போல, கொஞ்ச நாட்களில் ஆற்றை காணும் என்ற நிலை வரப்போகிறது. 

தமிழக மக்கள் திமுக, அதிமுக மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் வரும். அதற்கான முன்னோட்டம் தான் இது. இந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் கூடாரம் காலி ஆகிவிடும்'' என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Campaign in Arakonam for K Balu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->