பயன்பாட்டிற்கு வராத அம்மா திருமண மண்டபங்கள் - டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt
கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத அம்மா திருமண மண்டபங்கள்; மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட அம்மா திருமண மண்டபம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை மூடி வைத்திருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.
இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கிய திமுக அரசு தற்போது அம்மா திருமண மண்டபங்களை திறக்காமல் காலம் தாழ்த்துவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அம்மா திருமண மண்டபங்களை திறந்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும்" எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்
English Summary
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt