டிடிவி தினகரனை அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்திய மரணம்.!!
ammk member passed away
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அன்பு சகோதரர் கௌதம் சாகர் அவர்கள் திடீரென மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

கழகத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் இழப்பாகும்.
சில தினங்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் நேரில் சந்தித்த அவரது முகம் இன்னமும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. திரு.கௌதம் சாகர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.