400+ லிருந்து 300 ஆக சரிந்த பாஜகவின் நம்பிக்கை.. மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவாரா..?
Amitshah is confident BJP will win more than 300 seats
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தோடு இந்தியாவில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. இரண்டாவது முறையாக அமைந்த பாஜக அரசானது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்திடும் வகையில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

அதிலும் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று சாதனை படைத்திடும் வகையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது.
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளதாக எதிர்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதனால் 400+ தொகுதிகள் என்ற பாஜகவின் கனவு நிறைவேறுமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா "புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணித்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 இடங்கள் வரை வெற்றி பெறும். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பார். அந்த தேர்தலில் காங்கிரஸ் தற்பொழுது பெற்றுள்ள எண்ணிக்கையை விட குறைவான இடங்களை பெறும்" என அமித்ஷா தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முன்பு 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் எனக் கூறிவந்த நிலையில் தற்பொழுது 300 இடங்களுக்கு மேல் என சரிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இன்னும் சில மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவின் செல்வாக்கு சரியா கூடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினம் என்று தெரிகிறது.
English Summary
Amitshah is confident BJP will win more than 300 seats