பாஜகவுக்கு வாக்களித்தால் அயோத்தி ராமர் கோவிலில் இலவச தரிசனம்.!
AmitShah announced free darshan at ayodhya ram temple
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்ற வருவதால் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது பாஜக

ஏழை குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர், பட்ட மேற்படிப்பு வரை ஏழை பெண்களுக்கு இலவச கல்வி, அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம், பழங்குடியின மக்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் பொதுமக்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று இலவசமாக தரிசனம் செய்ய பாஜக ஏற்பாடு செய்யும் என வாக்குறுதி அளித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் அமித்ஷா இந்த வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
AmitShah announced free darshan at ayodhya ram temple