இந்தியை கற்றுக்கொள்ளாதவரை நமது சொந்த மொழியில் நாட்டை வழிநடத்த முடியாது - அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாடு நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான ஹிந்தியை நாம் கற்க வேண்டும்.
 
ஒவ்வொரு மொழியையும் நாம் பலப்படுத்துவதன் மூலம் அலுவல் மொழியான ஹிந்தியையும் நாம் பலப்படுத்த முடியும். உள்ளூர் மொழிகளும், ஹிந்தி மொழியும் நமது கலாச்சார கலந்தவை.

ஹிந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது.

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நுணுக்கமாக ஆராய வேண்டும். தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு உள்ளூர் மொழியை பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சித் துறையிலும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitsha speech about Hindi language


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->