விஜய் வீட்டிற்கு பக்கத்திலேயே..வீடு பார்த்த அமித் ஷா..தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! அமித் ஷா-வின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வசித்து வரும் பனையூர் – நீலாங்கரை பகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்காலிகமாக தங்குவதற்கான வீடு தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் ஏற்கனவே ஒரு வீட்டை அவர் பார்வையிட்டுள்ளதாகவும், விரைவில் அங்கு தற்காலிக குடியிருப்பாக குடியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் பாஜக தனது கவனத்தை அதிகரித்துள்ள நிலையில், அமித் ஷா வாரத்திற்கு ஒருமுறை சென்னை வந்து தங்க திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் வசதியான பெரிய குடியிருப்பு ஒன்றை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிண்டி, அடையார், மயிலாப்பூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகள் பார்வையிடப்பட்ட நிலையில், இறுதியாக விஜய் வசிக்கும் பகுதிக்கு அருகே கவனம் சென்றதாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் தேர்தல் வியூகங்களை நேரடியாக கண்காணிக்கவே அமித் ஷா தமிழ்நாட்டில் தங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அவர் தமிழகம் வரும்போது, கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அதிமுக – பாஜக கூட்டணிக்குள் கூட்டணி விரிவாக்கம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. கூட்டணியில் யார் இணைய வேண்டும், எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவை அதிமுக தான் எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதில் அதிமுக தயக்கம் காட்டுவதாகவும், தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்குள் கொண்டுவர விஜய் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், அமித் ஷாவின் தமிழக வருகையும், அவர் சென்னையில் நிரந்தரமாக தங்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெறுவதும், 2026 தேர்தலை முன்னிட்டு பாஜக மிக தீவிர அரசியல் நகர்வுகளை தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah buys house next to Vijay house new stir in Tamil Nadu politics What is the reason for Amit Shah decision


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->