திமுகவுடன் கூட்டணியா... என்ன? - விரைவில் கூட்டணி குறித்து தெரிவிப்போம் என்ற பிரேமலதா விஜயகாந்த்
Alliance with DMK what Premalatha Vijayakanth says we announce alliance soon
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடியிருக்கும் இல்லத்திற்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்றார். அவரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்:
இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் 'பிரேமலதா விஜயகாந்த்' பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது," 100 % மரியாதை நிமித்தமாகவும், உடல்நிலை குறித்து விசாரிக்க மட்டுமே முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன்.
இதில் கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது. குடும்பம் மற்றும் நட்பு ரீதியாக அவரின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் முதலமைச்சரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தேன்.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேப்டன் சார்பாகவும் தே.மு.தி.க. சார்பாகவும் சந்தித்தேன்.எங்களின் குறிக்கோளாக தே.மு.தி.க.வை பலப்படுத்தும் பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம். 2026 ஜன.9-ல் நடைபெறவுள்ள தே.மு.தி.க. மாநாடு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்கம்.
யாருடன் யார் கூட்டணி என தற்போது தெரிவிக்க முடியாது. இன்னும் நேரம் இருப்பதால் சரியான நேரத்தில் கண்டிப்பாக அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Alliance with DMK what Premalatha Vijayakanth says we announce alliance soon