ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம்; முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள்: வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அமல் படுத்தப்பதும் என தகவல்..!
Alliance party leaders have submitted a petition to the Chief Minister requesting that a separate law be brought to prevent honor killings
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
கடந்த வாரத்தில் நெல்லையில் ஐடி ஊழியர் கவின் என்பவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து இவ்வாறு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறிவருகின்றது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை என பல தரவினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-3ymhm.png)
இந்நிலையில், இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன், ஆகியோர் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். இதன் போது ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற கோரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்துள்ளனர். சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்ததாக கூறப்படுகிறது. இதன் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாகவும், தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
-fersq.png)
மேலும், நெல்லை கவின் ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதோடு, இது தொடர்பான மனுவையும் அவரிடம் அளித்துள்ளனர்.
அப்போது ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வருவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, வரவுள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இது தொடர்பான சட்டம் கொண்டு வருவது குறித்து முதல்வர் சந்திப்பின் போது வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Alliance party leaders have submitted a petition to the Chief Minister requesting that a separate law be brought to prevent honor killings