டெல்லி : வங்கதேச நிலவரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்..!! - Seithipunal
Seithipunal



வங்கதேச நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

வங்கதேசத்தில் நேற்று முன்தினம் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, உடனடியாக தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். 

வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கனபாபனில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசினா புதுடெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியுள்ளார். இதையடுத்து உத்திரபிரதேசம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை சந்தித்த இந்திய பாதுகாப்புத் துறையின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், அவரிடம் வங்கதேசத்தின் தற்போதைய சூழல் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். 

இதையடுத்து பிரதமர் மோடி இன்று காலை மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் ஷேக் ஹசினா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேச நிலவரம் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்து வருகிறார். 

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில், ஷேக் ஹசினாவிற்கு இந்தியாவில் தஞ்சமடைய தற்காலிக அனுமதியே வழங்கப் பட்டுள்ளதாகவும், இங்கிருந்து அவர் விரைவில் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

All Party Meeting In Delhi Parliament On Behalf Of Bangladesh Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->