அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. தேதி குறித்த முதல்வர் முக ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அந்த மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இவ்வளவு நாட்கள் காலம் தாழ்த்திய நிலையில், தற்போது திடீரென அந்த மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு, சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டி உள்ளார். இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை காலை 11 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில், திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா சுப்பிரமணியன், காங்கிரஸ் - செல்வபெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சி -  வெங்கடேஸ்வரன், மதிமுக -  ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -  நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் -  சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி -  வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன் உள்ளிட்ட 10 கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றுள்ளனர். அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சி பிரதிநிதிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்துக்கு அனைத்துக்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் 9ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது, நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். 2006-ல் நுழைவுத்தேர்வு தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளிப்படையானது என அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

all party meet decision


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->