திமுக, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு! உண்மையை போட்டு உடைத்த கே.எஸ் அழகிரி! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்தநாளான இன்று சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் "ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய நாள் இன்று. நேரு மட்டும் இல்லையென்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போல இந்தியாவும் தற்பொழுது இருந்திருக்கும். இந்தியர்களுக்கு பெருமை தரக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். விவசாயத்திற்காக ஏராளமான அணைகளை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்தினார். 

இந்தியா முழுவதும் கல்வியை கொண்டு சேர்த்தவர் ஜவஹர்லால் நேரு. பி.எஸ்.என்.எல்லை இந்தியாவின் மூளை முடுக்கெங்கும் கொண்டு சென்றார். இவ்வாறு ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தற்பொழுது அழிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் பேசிய கே க்ஷ.எஸ் அழகிரி  "கொலைகாரர்களை வெளியே விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒரு நீதியா? 

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு. திமுக காங்கிரஸ் இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. அதனையும் தாண்டி மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்" என தெரிவித்தார். இதனால் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alagiri said Disagreement between DMK and Congress


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->