அறிவிப்பு!!! 'அம்மா உணவகம்' போல் கர்நாடகாவில் 'அக்கா உணவகம்'- சித்தராமையா - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்நிலையில், கர்நாடகா சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பட்ஜெட்(7 ஆம் தேதி) இன்று தாக்கல் செய்யப்படும் என முதல் மந்திரி சித்தராமையா இதற்கு முன்பாகவே அறிவித்திருந்தார். அதன்படி கர்நாடகா பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதுவரை அவர் 15 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது 16 வது முறை.

இந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சில பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியது. அவை,
•தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்.
• சிறுபான்மைப் பெண்களுக்காக 2024 -25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தை நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
* அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும்.
* கர்நாடக முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ. 200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம்.
•பெங்களூரு மெட்ரோ கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும்.
•பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கிலோ மீட்டர் நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது. •கன்னட மொழித் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்குச் சொந்தமாக போட்டிட்டி தளத்தைத் தொடங்கும்.
•பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம். என முதல் மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Akka Restaurant in Karnataka like Amma Restaurant Siddaramaiah


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->