பாஜக-வை வளரவிட்ட்டால் நாடு முழுவதும் ராணுவ ஆட்சி தான் - அகிலேஷ் யாதவ்.! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். 

உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது, அரசியல்சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பா.ஜ.க. அதிகமாக வலுவடைந்தால் உங்கள் வாக்குரிமை பறிபோகும். இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில் அண்டை நாடான சீனாவில் தேர்தல் ஏதாவது நடக்கிறதா? அதற்கு அப்பால் போனால் ரஷியாவிலும் தேர்தல்கள் இல்லை. பாகிஸ்தானில் ராணுவம் விரும்பும் அரசு அமைகிறது. மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தேர்தல்கள் இல்லை எனவே எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின், வீடுகள் தோறும் தேசிய கொடி பிரசாரத்தையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்தார். வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றக்கூறும் இவர்கள், ஒரு காலத்தில் மூவர்ண கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh yadav speech about BJP


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->